திருப்பனந்தாள் அருகே அதிமுக தேர்தல் தோல்வி மற்றும் கட்சி பிளவுபட்டதால் மனமுடைந்த அதிமுக பிரமுகர் மகேந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "யாரும் இது போல் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு, "இந்த துக்ககரமான நேரத்தில் என்னால் பதில் அளிக்க இயலாது" என்றும் தெரிவித்து, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதி உதவி அறிவித்துள்ளார்.