கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவியை அரசு ஆண்கள் கல்லூரி மாணவர் பாலகிருஷ்ணன் கட்டாயப்படுத்தி தாலி கட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாமக பொறுப்பாளர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது, மாணவர் பாலகிருஷ்ணனின் தாயார் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை சட்டப்பிரிவில் பாமக மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்து வரும் 28ஆம் தேதி ஆடுதுறை பேரூராட்சி முழுவதும் கடையடைப்பு, பேரணி மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.