கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கும்பகோணத்தில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாததைக் கண்டித்து கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். திமுக அரசு தனது தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினர்.