மதுக்கடையை மூட வலியுறுத்தி மஞ்சள் தாலிக்கயிறுடன் போராட்டம்

4பார்த்தது
மதுக்கடையை மூட வலியுறுத்தி மஞ்சள் தாலிக்கயிறுடன் போராட்டம்
குடந்தை நாகேஸ்வரன்கோவில் தெற்கு வீதியில் புதிதாக திறக்கப்பட்ட தனியார் மதுபானக்கடையை அகற்றக்கோரி, தவெகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, மஞ்சள் தாலி கயிற்றுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத்ரவி தலைமையில் நடைபெற்ற இந்த மறியலில், 15 பெண்கள் உட்பட 115 பேர் கைது செய்யப்பட்டனர். குடந்தை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி