கும்பகோணத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம்

533பார்த்தது
கும்பகோணத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம்
கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மாநகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் கடந்த 11-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாநகராட்சிப் பணியாளர்கள், கால்நடைத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 9 வார்டுகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள வார்டுகளிலும் விரைவில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி