சென்னை வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற புதன்கிழமை (நவ. 26) ‘சென்யார்’ புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (நவ. 24) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (நவ. 24) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.