கும்பகோணம் மாநகரில் பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்

1பார்த்தது
கும்பகோணம் மாநகரில் பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்
கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பரத் தட்டிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இதன்படி, உதவி நகர திட்டமிடுநர் அருட்செல்வன், திட்ட உதவி பொறியாளர் சரவணன் மற்றும் உதவி பொறியாளர்கள் நேற்று கும்பகோணத்தின் நான்குசாலை, ரயில் நிலைய சாலை, மகாமகம் குளம், இந்திரா காலனி, உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதி, தாராசுரம் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றினர். இந்தப் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் சக்திவேல், இன்ப நித்திஷ்குமார் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி