தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஹரீஷ் (26) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உணவகத்தில் வேலை பார்த்து வந்த ஹரீஷ், விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தபோது மனைவி தேவதர்ஷினியுடன் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாச்சியார்கோவில் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.