ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் சிறப்பு பயிற்சி

3பார்த்தது
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் சிறப்பு பயிற்சி
தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு 'உணவு ஊட்டச்சத்தியல்', 'உடல் எடை சீரமைப்பு' போன்ற பயிற்சிகளை இலவசமாக வழங்குகிறது. 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18-35 வயதிற்குட்பட்ட, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இராணிப்பேட்டை, திருவள்ளூரில் 50 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் தங்கும் செலவை தாட்கோ ஏற்கும். பயிற்சி முடிப்பவர்களுக்கு ₹15,000 - ₹20,000 மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை ஆட்சியர் இரா. ரேவதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி