சுவாமிமலை: காவிரி ஆற்றின் படித்துறையை சீரமைக்க கோரிக்கை

1பார்த்தது
சுவாமிமலை: காவிரி ஆற்றின் படித்துறையை சீரமைக்க கோரிக்கை
அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் தென்புறம் உள்ள குமாரதாரகை மற்றும் பெண்கள் படித்துறைகள் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. சமூக விரோதிகளால் மதுபாட்டில்கள் உடைத்து வீசப்படுவதாலும், நாணல் புதர்கள் வளர்ந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக படித்துறைகளை சீரமைத்து, நாணல் புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி