கும்பகோணம் அருகே அதிகாலையில் பயங்கர வெடி விபத்து

1331பார்த்தது
கும்பகோணம் அருகே மணப்படையூரில் உள்ள 'அன்னை மாதா' நாட்டு வெடி தயாரிப்பு கூடத்தில் இன்று (மே 15) அதிகாலை பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. இதனால் ஒரு கட்டிடம் தரைமட்டமானது. கடந்த 9-ஆம் தேதி இதே இடத்தில் விபத்து நடந்த நிலையில், ஒரு வாரத்திற்குள் மீண்டும் விபத்து நிகழ்ந்திருப்பது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அதிகாலை நேரம் என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சுவாமிமலை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி