சூரியனார்கோயில் ஆதீனத்தின் குரு மகா சந்நிதானம் பொறுப்பேற்பு

467பார்த்தது
சூரியனார்கோயில் ஆதீனத்தின் குரு மகா சந்நிதானம் பொறுப்பேற்பு
தஞ்சாவூர் மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சூரியனார்கோயில் ஆதீனத்திற்கு புதிய மடாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற பீடாரோகண வைபவத்தில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளின் ஆசியுடன், ஸ்ரீமத் ராமலிங்க தம்பிரான் சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனத்தின் 30-வது குருமகா சந்நிதானமாக, ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாசாரிய சுவாமிகள் என்ற திருநாமத்துடன் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி