நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் அமைந்துள்ள திருபுவனத்தில், ஊழியர்கள் அனைத்து கடைகளையும் அடைத்துவிட்டு நேற்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். MRP விலைக்கு மேல் மது விற்பனை செய்ய மாட்டோம், காலி பாட்டில்களை வாங்க மாட்டோம், கடைகளின் கூடுதல் செலவுகளை அரசே ஏற்க வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து கடையடைப்பு
போராட்டம் தொடரும் என ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.