சுவாமிமலை: சாா்-பதிவாளரகத்தில் ரூ.1,500 லஞ்சம்.. இருவா் கைது

83பார்த்தது
சுவாமிமலை: சாா்-பதிவாளரகத்தில் ரூ.1,500 லஞ்சம்.. இருவா் கைது
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை சார்-பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழ் பெற ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய பெண் தலைமை எழுத்தர் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியரை ஊழல் தடுப்பு போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கபிஸ்தலத்தைச் சேர்ந்த விவசாயி நிலத்துக்கு வில்லங்கச் சான்றிதழ் கேட்டு சுவாமிமலை சார்-பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது ரூ. 1,500 லஞ்சம் தர வேண்டும் என தலைமை எழுத்தர் பத்மஸ்ரீ கேட்டு விவசாயியிடம் ரூ. 1000 பெற்ற நிலையில் பாக்கி ரூ. 500 ஐ கேட்டு அவரைப் பலமுறை அலையவிட்டாராம். 

இதனால் வேதனையடைந்த விவசாயி தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் செய்து, அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ. 500 ஐ அலுவலகத்தில் இருந்த தலைமை எழுத்தர் பத்மஸ்ரீயிடம் செவ்வாய்க்கிழமை கொடுத்தார். அப்போது பத்மஸ்ரீ இங்கு வேலைபார்த்து ஓய்வு பெற்ற ஊழியர் மகாலிங்கம் என்பவரிடம் பணத்தைக் கொடுக்குமாறு கூறினார். அதன்படி விவசாயி பணத்தைக் கொடுத்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் அன்பரசன் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி