கும்பகோணம் நகை கடையில் திருடிய இரு நபர்கள் கைது

1பார்த்தது
கும்பகோணம் நகை கடையில் திருடிய இரு நபர்கள் கைது
கும்பகோணம் சாரங்கபாணி கீழ் வீதியில் உள்ள நகைக்கடையில், நேற்று பெண்கள் சிலர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது, 2 இளைஞர்கள் தங்க டாலர் வாங்குவது போல் நடித்து, 1 கிராம் தங்க டாலரை திருடி தப்பி ஓட முயன்றனர். இதனை சுதாரித்துக்கொண்ட பெண் ஊழியர் சந்தியா விரட்டி சென்று பொதுமக்களின் உதவியுடன் அவர்களை பிடித்தார். பொதுமக்கள் இருவரையும் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அப்பாஸ்அலி(19) மற்றும் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த முகமது(23) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி