தஞ்சாவூர் மாவட்டத்தின் 4-வது வேளாண் துறை அமைச்சராக கும்பகோணம் தொகுதி தவெக எம். எல். ஏ ர. வினோத் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணம் தொகுதிக்கு மீண்டும் அமைச்சர் அந்தஸ்து கிடைத்துள்ளது. மேலும், தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த பாபநாசம் தொகுதி எம். எல். ஏ ஏ. எம். ஷாஜகான் வெள்ளிக்கிழமை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதன் மூலம் பாபநாசம் தொகுதிக்கு இரண்டாவது முறையாக அமைச்சர் வாய்ப்பு கிடைப்பதுடன், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் கிடைத்துள்ளனர்.