கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி ரயில்வே கேட் பகுதியில் உரிமம் இல்லாமல் வெடிபொருள்கள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சுவாமிமலை காவல்துறையினர் சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், வெடிபொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு கிலோ மருந்து மற்றும் காலி டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அருள் டேவிட், அருள்செல்வம், மணிகண்டன், சசிமேரி ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், வருவாய்த்துறையினர் அந்த வெடிபொருள் கடைக்கு பூட்டி சீல் வைத்தனர்.