ஏர் ஹாரன் பயன்படுத்திய வாகனங்களுக்கு தலா ரூ10 ஆயிரம் அபராதம்

2பார்த்தது
ஏர் ஹாரன் பயன்படுத்திய வாகனங்களுக்கு தலா ரூ10 ஆயிரம் அபராதம்
கும்பகோணத்தில் இயங்கும் பெரும்பாலான வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் (ஏர்ஹாரன்) பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்ட நிலையில், போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் ஆய்வு நடத்தினர். காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்திய ஐந்து வாகனங்களுக்கு தலா ₹10,000 வீதம் மொத்தம் ₹50,000 அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்தி