தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவதாக பரவிய தகவல்களை மறுத்துள்ளார். கும்பகோணத்தில் பேசிய அவர், நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்பது தன் பார்வை அல்ல என்றும், ஆனால் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் எந்தப் பங்களிப்பும் செய்யாமல் கிங்மேக்கராக அல்ல, கிங்காக இருப்பேன் என்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.