கும்பகோணம்: குழந்தையிடம் தங்கத் தாயத்து திருடிய பெண் கைது

கும்பகோணம் அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில், குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து, குழந்தையின் கழுத்திலிருந்த தங்கத் தாயத்தை திருடிச் சென்ற சரஸ்வதி (40) என்ற பெண் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த இவர், இதுபோன்று பல குழந்தைகளிடம் திருடியது விசாரணையில் அம்பலமானது. அவரிடமிருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.
