கும்பகோணத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு, அவரது முன்னாள் சக ஊழியரான செந்தில்குமரன் (42) என்பவர் முறையற்ற குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் செந்தில்குமரனின் மனைவி மற்றும் அலுவலக அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், செந்தில்குமரன் அந்த இளம்பெண்ணைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். காயமடைந்த பெண் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.