தஞ்சை: பாட்டாளி மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்

69பார்த்தது
தஞ்சை: பாட்டாளி மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்
மகாபலிபுரத்தில் வருகிற மே 11ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு சிறப்பாக நடைபெற்று அது வெற்றி மாநாடாக அமைய, கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சை மாவட்ட பாமக பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எஸ் வி சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் எம் கே ஸ்டாலின், மாநாட்டுக்குழு மாவட்ட பொறுப்பாளர்களான சத்திரிய சேகர், வழக்கறிஞர் துரைராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

அடுத்தகட்டமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் இத்தகைய ஆலோசனை கூட்டங்களை நடத்துவது. கிராமங்கள் தோறும் விளம்பர பதாகைகள் வைத்து மாநாட்டின் நோக்கம் குறித்து பிரச்சாரம் செய்வது. மாநாட்டிற்கு 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் 20000 பேர்களை அழைத்து சென்று, இந்த மாநாட்டின் நோக்கம் வெற்றி பெற செய்வது. மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி நின்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் நிலையை போக்குவதற்கு ஆறு, ஏரி, குளங்கள் தூர்வாரப்பட வேண்டும் என்று முடிவு செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் மதி. விமல், ராம்குமார், தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்புடைய செய்தி