தஞ்சாவூர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், 2025-26 ஆம் ஆண்டிற்கு அரசு, அரசு நிதியுதவி மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. மிதிவண்டிகள் கோர்க்கும் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற/பெறாத ஆண்கள், ஐடிஐ படித்த ஆண்கள் மற்றும் ஏற்கனவே இப்பணி செய்தவர்கள் 15.11.2025-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.