நாகை: கார் மீது மோதி மீனவர் பலி

62பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன் மீனவர். இவரும் செருதூர் பகுதியை சேர்ந்த சகிலன், ரித்தீஷ் ஆகிய 3 பேரும் வாஞ்சூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். செல்லூர் கிழக்கு கடற்கரை சாலை அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய ஜெகதீசன், சகிலன் ஆகியோர் சாலையை கடக்க முயன்றனர். அப்போது எதிரே வேளாங்கண்ணியில் இருந்து நாகூர் நோக்கி சென்ற கார் ஒன்று இருவரின் மீது மோதி எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த வயலில் பாய்ந்தது. இதில் கார் முதலில் மோதியதில் ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே பலியானார். சகிலன் படுகாயம் அடைந்தார். மேலும் கார் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அதில் வந்த செல்லூரை சேர்ந்த காளிதாஸ், மாதவன், ஜெமினி ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த சகிலன் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல காயமடைந்த காளிதாஸ், மாதவன், ஜெமினி ஆகியோர் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி