தோகூர்: மோட்டார் சைக்கிளில் மணல் ஏற்றி வந்த 2 பேர் கைது

85பார்த்தது
தோகூர்: மோட்டார் சைக்கிளில் மணல் ஏற்றி வந்த 2 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் போலீசார் கல்லணை அருகே உள்ள செய்யாமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்கள் உரிய அனுமதி இன்றி வெள்ளை சாக்கு மூட்டைகளில் மணல் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் இந்தளூர் கீழத்தெருவை சேர்ந்த சிவக்குமார் (33), மேலத்தெருவை சேர்ந்த பழனிவேலு (50) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி