மேற்கூரை பெயா்ந்து விழுந்து விஏஒ உள்பட 3 போ் காயம்

1பார்த்தது
மேற்கூரை பெயா்ந்து விழுந்து விஏஒ உள்பட 3 போ் காயம்
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட நெய்வாசல் தென்பாதி கிராமத்தில் உள்ள விஏஓ அலுவலகத்தில் தலையமங்கலம் விஏஓ நடராஜன் (36) பணியில் ஈடுபட்டிருந்தபோது, நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்த பொ. பாலசுந்தரம் (73) மற்றும் முரு. பாண்டியன் (55) ஆகியோர் சிட்டா அடங்கல் பெற வந்திருந்தனர். அப்போது அலுவலக மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் மூவரும் காயமடைந்தனர். அவர்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தலையில் காயமடைந்த பாலசுந்தரம் சிகிச்சை பெற்று வருகிறார், மற்ற இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

தொடர்புடைய செய்தி