ஓரத்தநாடு அருகே திருவோணம் தாலுகாவில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாமில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு அருகே உள்ள திருகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட உங்களைத் தேடி உங்கள் ஊரில் முதல்வரின் விரிவான திட்டத்தின்கீழ் சமூக நலத்துறை சார்பாக 2 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் பொது மக்களிடம் 792 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் வருவாய்த்துறை சார்பாக இருபதுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. இந்த உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்வில் வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டார்.