பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என தஞ்சை பிஎஸ்என்எல் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தஞ்சை பிஎஸ்என்எல் தொலை தொடர்பு வணிக பகுதி பொது மேலாளர் கூறியதாவது: 2024-2025 நிதியாண்டு நிறைவை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் வசதிக்காக தஞ்சை வணிக பகுதிக்குட்பட்ட அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் வரும் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் செயல்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தொலைபேசி கட்டணம் செலுத்துதல், புதிய இணைப்பு மற்றும் வேறு நிறுவனத்தில் இருந்து எண்களை மாற்றுதல், பிஎஸ்என்எல் எம்என்பி இணைப்பு, புதுப்பித்தல் சேவைகள் தடையின்றி வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.