மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மாதாந்திர உதவித் தொகையை குறைந்தபட்சம் 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும், 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி, கூலியை நாள் ஒன்றுக்கு 600 ரூபாயாக அதிகரிக்கவும் வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மனு அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டக்குழு சார்பில், ஞாயிற்றுக்கிழமை தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலியை சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி. எம். இளங்கோவன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.