குதிரை வண்டியில் சென்று வாக்கு கேட்ட திமுக வேட்பாளர்

4பார்த்தது
குதிரை வண்டியில் சென்று வாக்கு கேட்ட திமுக வேட்பாளர்
திருவையாறு தொகுதி திமுக வேட்பாளர் துரை சந்திரசேகரன், வெள்ளாம்பெரம்பூரில் குதிரை வண்டியில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும், சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் மானியக் கடன் வழங்கப்படும் என உறுதியளித்தார். நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500, கரும்பு டன்னுக்கு ரூ. 4,500, காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் மற்றும் பால் கொள்முதல் விலை உயர்வு போன்ற வாக்குறுதிகளை முன்வைத்து ஆதரவு கோரினார். இந்நிகழ்வில் எம்.பி. முரசொலி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி