நெல்மூட்டைகளை 100 வடிவில் அடுக்கி தேர்தல் விழிப்புணர்வு

0பார்த்தது
நெல்மூட்டைகளை 100 வடிவில் அடுக்கி தேர்தல் விழிப்புணர்வு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துறையூர் கிராமத்தில், நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் 100% வாக்களிக்க வலியுறுத்தி, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை 100% என்ற வடிவத்தில் அடுக்கி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலர் கவிதா தலைமையில் வருவாய் ஆய்வாளர் அருண்பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி