தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தஞ்சை நகரிய கோட்டம் சார்பில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 25ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை கோர்ட் ரோட்டில் உள்ள நகரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விமலா தலைமை வகிக்கிறார். இதில் தஞ்சை நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட நகர எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டு வசதி வாரியம், காந்திஜி ரோடு, மருத்துவக் கல்லூரி ரோடு, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரஹ்மான் நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சிங்கபெருமாள்குளம், ஜெப மாலைபுரம், வித்யா நகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ்ப்பல்கலைக்கழக வளாகம் குடியிருப்பு, கோட்டை ரோடு, புதிய பஸ் நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திர நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான தங்கள் புகார்களை நேரில் கூறி பயன் பெறலாம் என்று தஞ்சை நகரிய செயற்பொறியாளர் செந்தில் நாதன் தெரிவித்துள்ளார்.