தஞ்சாவூரில் குத்தகை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்- விவசாயிகள் சங்கம்

59பார்த்தது
தஞ்சாவூரில் குத்தகை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்- விவசாயிகள் சங்கம்
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என். வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜத்திடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: "மூன்று வேளாண் சட்டங்களின் நகலாகக் கொண்டு வரப்பட்டுள்ள தேசிய வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தும் வரைவு அறிக்கையை (வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்டவை) திரும்பப் பெற வேண்டும். 

ஒரத்தநாடு, அம்மாபேட்டை பகுதிகளில் அறுவடை பணிகளில் நடைபெற்று வருவதில், மழை, வெள்ளம் காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் காப்பீடு மாதிரி அறுவடையை உடன் செய்து இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூதலூர் தாலுகா வெண்டையம்பட்டி ஊராட்சி வேலுப்பட்டி கிராமத்தில் நீண்ட நெடுங்காலமாக மின்கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் சென்று உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும். ஒரத்தநாடு தாலுகா பஞ்சநதிக்கோட்டை, காசாவளநாடு, கோவிலூர், ஆழிவாய்க்கால், நெல்லுப்பட்டு, சேதுராயன்குடிக்காடு, ஈச்சங்கோட்டை பகுதிகளில் அருள்மிகு கெம்புகேசவர் திருக்கோவில் நிலத்திற்கு சொந்தமான இடத்தில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருபவர்களை வெளியேற்றும் முயற்சி நடைபெறுகிறது. எனவே, விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

தொடர்புடைய செய்தி