தஞ்சாவூரில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் ஜன. 3 வெள்ளிக்கிழமை பிற்பகல் 02. 30 மணி அளவில் நடைபெற உள்ளது.
அக்கூட்டத்தில், சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதியப் பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.