தஞ்சை: நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை

73பார்த்தது
தஞ்சை: நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை
தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையன்று விவசாயிகள் குறைதீர்க்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் செ. இலக்கியா தலைமை வகித்தார். இதில் பூதலூர், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு வட்டார விவசாயிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: சம்பா, தாளடி முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வயல்களில் மண் வளத்தை பெருக்க வேளாண்துறை மூலம் பசுந்தாள் விதைகளை இலவசமாக வழங்க வேண்டும். அதே போல் மண் பரிசோதனை, நீர் பரிசோதனையை அந்தந்த கிராமங்களிலேயே நேரில் சென்று வேளாண்மைத்துறை சார்பில் நடத்த வேண்டும். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி பெருமளவு மேற்கொள்ளப்பட்டுள்ளதால், மும்முனை மின்சாரம் 16 மணி நேரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணியை உடன் தொடங்கி தண்ணீர் வருவதற்குள் முடிக்க வேண்டும். மானாவாரி பகுதிகளில் நிலக்கடலை அறுவடை நடைபெற்று வருகிறது. 80 கிலோ கொண்ட கடலை தனியார் வியாபாரிகள் ரூ. 7,500-க்கு கொள்முதல் செய்கின்றனர். உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், இந்த விலை போதாது. எனவே, கடலையை அரசே ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கோரிக்கைகள் அனைத்தும் ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என கோட்டாட்சியர் உறுதியளித்தார்.
Job Suitcase

Jobs near you