தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 17ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களிலும், 18ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.