தஞ்சை மாவட்டம் மருதகுடி, செல்லப்பன்பேட்டை பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செம்மண் குவாரிகள் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு இடத்திற்குப் பெற்ற அனுமதியை வைத்துக்கொண்டு வேறு இடங்களில் செம்மண் மற்றும் கிராவல் வெட்டி எடுக்கப்படுவதாகவும், இது குறித்து வருவாய்த்துறை, காவல்துறையில் புகார் அளித்தும், வட்டாட்சியர் ஆய்வு செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.