பேராசிரியர்கள் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் ஆதரவு

284பார்த்தது
பேராசிரியர்கள் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் ஆதரவு
தமிழ்நாடு முழுவதும் அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்கள் சம ஊதியம் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசுக்கல்லூரியில் நடைபெறும் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பு. வசந்த் ஆதரவு தெரிவித்து பேசினார். இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மகாபாரதி, ரமணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.