தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் நகை வியாபாரிகள் சம்மேளன செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. தலைவர் சபரிநாத் தலைமை வகித்தார். பொதுச்செயலர் ரவீந்தரகுமார், பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகம் வரவேற்றார்.
வணிக நிறுவனங்கள் செலுத்தும் வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்தும், வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க கட்டிகளுக்கு தர நிர்ணயம் கொண்டு வர உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பொருளாளர் சண்முகம், துணைத் தலைவர்கள் சேகர், விஜயகுமார், இணைச் செயலர்கள் ராமநாதன், சிவக்குமார், ஆலோசகர் சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். செயலர் சேகர் நன்றி கூறினார்.