தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (டிஎன்சிஎஸ்சி) தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாநில இணைச் செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும், வருகை பதிவேட்டில் பெயர் இல்லாமல் சுமை பணி செய்யும் தொழிலாளர்களின் பெயர்களை பதிவேட்டில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.