தஞ்சாவூர் - ஆலக்குடி ரயில்வே தண்டவாளப் பகுதியில் இன்று 70 வயது மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தின் அருகே காயங்களுடன் இறந்து கிடந்தார். அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், ரயில்வே இருப்புப் பாதை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த மூதாட்டி யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.