பாபநாசம்: திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

951பார்த்தது
பாபநாசம்: திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கீழவழுத்தூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டு தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து, கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நிறைவாக அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி