தஞ்சை: கால்நடை வளர்ப்போருக்கு நலவாரியம் கோரி மனு

80பார்த்தது
தஞ்சை: கால்நடை வளர்ப்போருக்கு நலவாரியம் கோரி மனு
தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் நலவாரியத்தை அமைக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சபையின் மாநில அமைப்புச் செயலர் எஸ். அடைக்கலம் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: தமிழகத்தில் கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தவும், பால் உற்பத்தியை அதிகப்படுத்தவும், கிடைமாடு, ஆடு வளர்ப்பவர்களுக்கு பாதுகாப்பு, பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட தமிழக யாதவர்களின் நீண்டகாலக் கோரிக்கையான தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் நலவாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். மேலும், வாரியத்தில் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவரை தலைவராக நியமிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி