ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில், வரும் 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் தென்னமநாடு, கண்ணந்தங்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன்குடிக்காடு, பருத்திக்கோட்டை, பொய்யுண்டார்குடிக்காடு, கோவிலூர், ஆயங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என மின் பராமரிப்பு கழக ஒரத்தநாடு நகர் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.