தஞ்சை: மத்திய நிதி நிலை அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
தஞ்சை: மத்திய நிதி நிலை அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பலன் அளிக்கக்கூடியதாகவும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைவர் மீதும் வரிச்சுமையை ஏற்றும் விதமாகவும் உள்ளது. மேலும், தமிழ்நாடு, கேரளா மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கான நலன்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. 

கூட்டாட்சிக்கு எதிரான எதேச்சதிகார ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் மாநகரச் செயலாளர் எம். வடிவேலன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

 மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி, மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மூத்த தலைவர் என். சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், சி. ஜெயபால், பி. செந்தில்குமார், என். வி. கண்ணன், என். சுரேஷ்குமார், எஸ். தமிழ்ச்செல்வி, கே. அருளரசன், எம். செல்வம், ஆர். கலைச்செல்வி, என். சரவணன், கே. அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என். குருசாமி, களப்பிரன், இ. வசந்தி, சி. சரிதா, மாநகரக் குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you