லஞ்ச ஊழல் முறை கேடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

352பார்த்தது
லஞ்ச ஊழல் முறை கேடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை சிவ. சண்முகம் ஆகியோர் ஊழல் முறைகேடு மற்றும் சாதிய பாகுபாடு காட்டுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவோணம் வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பார்வேந்தன் கண்டன உரை ஆற்றினார். ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி