திருவோணம் அருகே வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு

0பார்த்தது
திருவோணம் அருகே வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியத்தின் வெங்கரையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், குறுவட்ட ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடம் ரூ. 35 லட்சத்தில் கட்டப்பட்டு, முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, வெங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக் குமார், ஒன்றியச் செயலாளர்கள் சோம. கண்ணப்பன், ஆர். பன்னீர் செல்வம், வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி