பட்டுக்கோட்டையில் மாநில பெண்கள் கபடி போட்டி

0பார்த்தது
பட்டுக்கோட்டையில் மாநில பெண்கள் கபடி போட்டி
பட்டுக்கோட்டையில், திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் கபடி அணிகள் பங்கேற்றன. அமைச்சர் மா. சுப்பிரமணியன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர். அமைச்சர்கள் கோவி. செழியன், கே. என். நேரு மற்றும் எம்எல்ஏக்கள் அண்ணாதுரை, அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார் போட்டியை ஏற்பாடு செய்தார்.