அரசு முறை ஊதியம் வழங்கக்கோரி சர்க்கரைஆலை ஊழியர் ஆர்ப்பாட்டம்

305பார்த்தது
அரசு முறை ஊதியம் வழங்கக்கோரி சர்க்கரைஆலை ஊழியர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை ஊழியர்கள், ஊதியப் பாகுபாட்டைக் களைய வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களிடையே நிலவும் இரட்டை ஊதிய முறையைத் தவிர்த்து, உயர் நீதிமன்றத் தீர்ப்புப்படி அனைவருக்கும் சமமான அரசு முறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி