தஞ்சாவூர்: போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசு

232பார்த்தது
தஞ்சாவூர்: போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசு
தஞ்சாவூா் மாவட்டத்தில் திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் விதமாக குறள் வார விழா நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் அரசு பணியாளா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். குறள் வினாடி வினா, குறள் ஒப்பித்தல், ஓவியப் போட்டி, கலை நிகழ்ச்சிகள், படத்தொகுப்பு மற்றும் ஒளிப்படப் போட்டிகள் நடத்தப்பட்டன. மொத்தம் 60 போ் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.

தொடர்புடைய செய்தி